நாளை(18.02.25) திருச்சி வரும் துணை முதல்வர் - சிறப்பு வரவேற்பு அமைச்சர் அறிக்கை

கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துனை முதலமைச்சர் அவர்கள் திருச்சி வருகை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை
நாளை 18/02/2025 செவ்வாய்கிழமை இரவு 7.30 மணியளவில் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துனை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்து திருவெறும்பூர் தொகுதியில் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திருமணங்களை நடத்தி வைக்க வருகை தர உள்ளார்கள் எனவே அவரை வரவேற்க விமான நிலையத்தில் மாநில,மாவட்ட,
மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,, பகுதி,ஒன்றிய, நகர, பேரூர் ,வட்ட,வார்டு,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision