நூலக அறிவியல் துறையின் தந்தை முனைவர் ரங்கநாதன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நூலக அறிவியல் துறையின் தந்தை முனைவர் ரங்கநாதன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் நூலக அறிவியல் துறையின் சார்பில் நூலக அறிவியல் துறையின் தந்தை முனைவர் ரங்கநாதன் அறக்கட்டளைச் சொற்பொழிவு கல்லூரிக் கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சுந்தரராமன் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரை நல்கினார்.

திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். இளமைப் பருவத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். படிக்கும் கல்வியை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். புதிய எழுச்சி மிக்க வாழ்வைப் பெற புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

நூலக அறிவியல் துறையின் தந்தை ரங்கநாதன் வாசிப்பை நேசிக்க வேண்டியதன் அவசியத்தை எவ்வாறெல்லாம் வலியுறுத்தினார் என்று மாணாக்கர் மனதில் பதியும் வண்ணம் உரை நிகழ்த்தினார். ஒரு புத்தகம் திறக்கப்படுகிற போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன, என்றால் சமூக முன்னேற்றம் காண வாசிப்பை நேசிக்க வேண்டும் என்று எழுச்சியுரை நிகழ்த்தினார்.

மேலும் கிராமங்கள் கூட இணையம் வாயிலான கல்வியைப் பெறுவதற்கு நாம் புதிது புதிதாகச் சிந்திக்க வேண்டும் என்றும் அத்தகைய சிந்தனைக்கு நூலகமே வழிகாட்டும் என்றும் உரை நிகழ்த்தினார். விழாவில் கல்லூரியின் மேனாள் துணை முதல்வர் முனைவர் இராகவன் பங்கேற்று முன்னிலை வகித்தார்.

கல்லூரியின் நூலக அறிவியல் துறையின் தலைவர் முனைவர் சுரேஷ்குமார் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்தார். பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO