46 வயதானவருக்கு பிளாஸ்டிக் மற்றும் நுண் அறுவை சிகிச்சை மூலம் துண்டான கையை இணைத்து காவேரி மருத்துவமனை சாதனை 

46 வயதானவருக்கு பிளாஸ்டிக் மற்றும் நுண் அறுவை சிகிச்சை மூலம் துண்டான கையை இணைத்து காவேரி மருத்துவமனை சாதனை 

காவேரி மருத்துவமனையில் 46 வயதானவருக்கு துண்டான கையை, Dr. S. ஸ்கந்தா தலைமையில் பிளாஸ்டிக் மற்றும் நுண் அறுவை சிகிச்சை குழுவினர் துண்டான கையை இணைத்து சாதனை செய்துள்ளனர்.

ஒரு 46 வயதான நபர் கான்கிரீட் பாலத்திலிருந்து கீழே விழுந்ததால் வலது முன்கை துண்டானது, அவர் சம்பவ இடத்திலேயே கவனிக்கப்படாமல் இருந்ததால் அவரது முன்கை அவரது உடலிலிருந்து 3 மணிநேரமாக தனியே துண்டாக கிடந்தது.

இதன் பின்னர் சுமார் ஐந்து மணி நேரம் கழித்து, அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார், நுண் அறுவை சிகிச்சை மற்றும் மறு இணைப்புக் குழுவின் மருத்துவர்களாகிய டாக்டர் S. ஸ்கந்தா மற்றும் டாக்டர் S. சொக்கலிங்கம் (மூத்த எலும்பு முறிவு மருத்துவர்), டாக்டர் K. செந்தில் குமார் (தலைமை மயக்க மருந்து நிபுணர்) மற்றும் டாக்டர் M. முரளிதாசன், டாக்டர் ஆதில் அலி (பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள்), டாக்டர் P. சசிகுமார் மற்றும் டாக்டர் S. நிர்மல் குமார் (மயக்க மருந்து நிபுணர்கள்) மற்றும் டாக்டர் M. கலைவாணன் (எலும்பு முறிவு நிபுணர்) இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

 வெற்றிகரமான அறுவை சிகிச்சை முடிந்து இணைந்த கையுடன் நோயாளி வீட்டிற்கு
அனுப்பப்பட்டார். 

துண்டான கைகளை மறு இணைப்பு செய்வது மிகவும் கடினமான அறுவை சிகிச்சையாகும், மேலும் இது மாநிலம் முழுவதும் ஒரு சில சிறப்பு நுண் அறுவை சிகிச்சை மையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த குறிப்பிட்ட அறுவை சிகிச்சை சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் நோயாளி மிகவும் தாமதமாக சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டார். மேலும் அவரது கை மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. கடுமையாக நசுங்கப்பட்ட கைகளின் பாகங்களை மீண்டும் மறு இணைப்பு செய்வது மிகவும் கடினம். மேலும், இவ்வாறு துண்டிக்கப்பட்ட பாகங்களை மறு இணைப்பு செய்வது என்பது, வெட்டுப்பட்டு துண்டான கைகளை இணைப்பதைவிட மிகவும் கடினம்.

இந்த நோயாளி 5 மாதங்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்ல முன்னேற்றமடைந்தார், மேலும் துண்டான கை நல்ல செயல்பாட்டுடன் இருக்கிறது.
 ( வேறு எந்தவொரு மறு இணைப்புமுறையிலும் சாத்தியமில்லாத சீரமைப்பு என்பது இவருக்கு வெகு விரைவாக கிடைக்கும் என்பது சாத்தியமே ). ஜூலை 15ஆம் தேதியான இன்று, தேசிய பிளாஸ்டிக் அறுவை  சிகிச்சை 
நாளாக கொண்டாடப்படுகிறது.

 சிறப்பு மறு இணைப்பு சிகிச்சையை காணிக்கையாக்குகிறோம். சில மாதங்களுக்கு முன்பு, இந்த அரிதான மற்றும் கடினமான அறுவை சிகிச்சை வாயிலாக கைகள் மறு இணைப்பு செய்யப்பட்டு நல்ல செயல்பாட்டுடன் இருப்பதை வெளிப்படுத்துவதற்காக இங்கு செய்தியாக வெளியிடப்பட்டது, அழகுக்கான அறுவை சிகிச்சை மற்றும் தீக்காயங்களுக்கான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஆகியவை பற்றி பலருக்கு தெரியும், நுண் அறுவை சிகிச்சை என்பது இவ்வகை அறுவை சிகிச்சைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த நுண் அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிக நிபுணத்துவமும், சிகிச்சைக்கான உபகரணங்களும் அவசியம் தேவை. உலகில் மிகச்
சிறந்த நுண்ணோக்கிகளில் ஒன்றான "ஜீஸ் கினெவோ இயக்க நுண்ணோக்கி" காவேரி மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளது.

மறு இணைப்பு சிகிச்சை வெற்றிகரமாக இருக்க, துண்டாக்கப்பட்ட பகுதி கூடிய விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட வேண்டும். துண்டிக்கப்பட்ட பகுதியை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, பின்னர் ஐஸ் கட்டியில் வைக்கப்பட்டு. (ஐஸ் கட்டியுடன் நேரடி தொடர்பில் ஒருபோதும் இருக்கக்கூடாது) பத்திரமாக கொண்டுவர வேண்டும்.

இஸ்கமியா நேரம்:

உடலில் இருந்து துண்டாக்கப்பட்ட பகுதி முற்றிலும் இரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கும் காலநேரத்திற்கு இஸகமியா நேரம் என்று பெயர். துண்டாக்கப்பட்ட பாகத்தை விரைந்து கொண்டுவருவதனால், மறு இணைப்பு சிகிச்சைக்குப்பின் முழுமையான செயல்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காணலாம்.

எனவே ஆரம்ப நிலையிலேயே நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால், உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம். டெல்டா மாவட்டங்களிலேயே திருச்சி காவேரி மருத்துவமனையில் அதிக அளவிலான மறு இணைப்பு மற்றும் நுண் அறுவை சிச்சையில் 80% வெற்றியுடன் சிறந்து செயல்படுகிறது.

குழந்தைகளுக்கான நுண் அறுவை சிகிச்சை, உதட்டு பிளவு, அன்னப்பிளவு, பிறவி கை குறைபாடு மற்றும் நீரிழிவு கால்நோய் புனரமைப்பு சிகிச்சையில் காவேரி மருத்துவமனை உலகளவில் முன்னணி சிகிச்சை மையமாக திகழ்கிறது. 

நீரிழிவு கால் நோய்க்கு "மைக்ரோ சர்ஜிக்கல் ஃப்ரீ பிளாப்" பயன்படுத்துவதற்கான ஒரு அச்சு வெளியீட்டினை அண்மையில் காவேரி மருத்துவமனையின் நுண் அறுவை சிகிச்சை துறை வெளியிட்டது, இது இணையத்தில் முன்னிலை வகிக்கிறது.

இன்றைக்கு தேசிய பிளாஸ்டிக் அறுவை  சிகிச்சை தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பில்,
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் D. செங்குட்டுவன், மருத்துவ நிர்வாகி டாக்டர் R. ராஜேஷ், தலைமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் S. ஸ்கந்தா, டாக்டர் K. செந்தில் குமார், தலைமை மயக்க மருந்து நிபுணர் மற்றும் டாக்டர் முரளிதாசன், டாக்டர் ஆதில் அலி (பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM