1000 டன் ஒரே நாளில் வரத்து - 10 ரூபாய்க்கு வெங்காயம்

1000 டன் ஒரே நாளில் வரத்து - 10 ரூபாய்க்கு வெங்காயம்

நம்முடைய உணவில் தவிர்க்க முடியாத காய்கறியாக வெங்காயம் உள்ளது. இதனால் அனைத்து மக்களுக்கும் வெங்காயம் என்பது அத்தியாவசியமான பொருளாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில்,    திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படும்.

அதை தவிர்த்து ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும். கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டிசம்பர் மாதம் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100க்கு விற்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலமாகவே சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல்தான் விற்பனையானது. சின்ன வெங்காயத்தின் விலை எப்போதுமே சீராக இருக்காது. வரத்து பொறுத்து விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும். விளைச்சல் அதிகரிக்கும் பட்சத்தில் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து விலை சட்டென குறையும். தற்போதும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாய் ஆக குறைந்துள்ளது. திருச்சி வெங்காய சந்தைக்கு சின்ன வெங்காயம் 1000 டன் வரத்து வந்துள்ளது. பெரிய வெங்காயம் 500 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளது.

சின்ன வெங்காயம் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும், வெங்காயம் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். சின்ன வெங்காயம் விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், விவசாயிகள் மத்தியில் கவலையடைய வைத்துள்ளது.

சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை அதன் விலை எப்போதுமே சீராக இருக்காது. வரத்து பொறுத்து விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும். விளைச்சல் அதிகரிக்கும் பட்சத்தில் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து விலை சட்டென குறையும். தற்போதும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாய் ஆக குறைந்துள்ளது.

திருச்சி வெங்காய சந்தைக்கு சின்ன வெங்காயம் 500 மூடை வரத்து வந்துள்ளது. பெரிய வெங்காயம் 500 மூடை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும் வெங்காயம் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். சின்ன வெங்காயம் விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision