சேதமடைந்த தொட்டி - வீணாகும் குடிநீர் - கண்டுகொள்ளாத மாநகராட்சி

சேதமடைந்த தொட்டி - வீணாகும் குடிநீர் - கண்டுகொள்ளாத மாநகராட்சி

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 63வது வார்டு திருவெறும்பூர் கைலாஷ் நகர் அண்ணாசாலை. இங்குள்ள குடிநீர் தேக்க தொட்டி 10 வருடங்களுக்கு மேலாக உள்ளது. இந்த தொட்டி சேதமடைந்த அதிகப்படியான குடிநீர் வெளியேறி குளம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் கொசு தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் டெங்கு போன்ற காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர்.

சேதமடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியினை சரி செய்ய கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக இந்த வார்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் இருந்தும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உடனடி

தீர்வு காணாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், மக்களுக்கு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்துவதற்குள் இதனை சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision