ரிங் ரோட்டில் புகை மண்டலம் - சிரமத்திற்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள்

ரிங் ரோட்டில் புகை மண்டலம் - சிரமத்திற்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள்

திருச்சி பஞ்சப்பூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சுற்று வட்டச் சாலையில் தற்பொழுது குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்தச் சாலையை ஒட்டி உள்ள ஓலையூர், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதியில் மனைகளை வாங்கி எராளமானோர் வீடுகளை கட்ட துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுவட்ட சாலையில் வடுகப்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் ஓரத்தில் கட்டிடக்கழிவுகள், குப்பைகள் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவைகளை இரவு நேரத்தில் வந்து கொட்டுகின்றனர். யார் இந்த செயல்களில் ஈடுபடுவது என்று தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை எழுந்துள்ளது. மேலும் அந்த குப்பைகளை தற்போது எரிக்க துவங்கியுள்ளனர்.

புதுக்கோட்டையில் இருந்து மதுரை வரும் வாகனங்களும், மதுரை சாலையில் இருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் செல்லும் வாகனங்களும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. அதிகளவில் புகை மூட்டத்துடன் சாலை காணப்படுகிறது. அளவுக்கு அதிகமாக குப்பைகள் எரிந்து புகை மூட்டமாக உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் அதிக வேகமாக வருகின்றன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்து ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இந்த கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த குப்பையை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளுக்கு, சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision