திருச்சியில் புதைக்குழியாக உள்ள சாலைகளால் பொதுமக்கள் அச்சம்

திருச்சியில் புதைக்குழியாக உள்ள சாலைகளால் பொதுமக்கள் அச்சம்

திருச்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மாநகரின் பிரதான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சாலைகளில் குழிதோண்டி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் மழை பெய்து வருவதால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சாலைகள் மோசமாக காட்சியளிக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர், ராமலிங்க நகர் முதல் தெரு கடைசியில் உள்ள யுவர்ஸ் காலனி, எம்.எம் லோட்டஸ் நகர் செல்லும், சாலையில் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும் சேறும், சகதியுமாக உள்ள இந்த சாலையில் கடக்கும் வாகனங்கள் சேற்றில் புதைந்து கிழே விழும் நிலை ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn