வ.வே.சு ஐயர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மரியாதை - ஆய்வு

வ.வே.சு ஐயர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மரியாதை - ஆய்வு

திருச்சிராப்பள்ளி வரகனேரியில்  உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு ஐயர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல்2 ஆம் தேதி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு ஐயர் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரகனேரி நினைவு

இல்லத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  மா பிரதீப் குமார் அவர்கள் இன்று (2.04.2025)மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து வா.வே.சு ஐயர் நினைவு இல்லத்தையும்  அதில்  செயல்பட்டு வரும் கிளை நூலகத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். தொடர்ந்து கிளை நூலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயின்று வருபவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி

போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் ஏதும் தேவை இருப்பின் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் நீங்கள் நல்ல முறையில் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் த அருள்,மாவட்ட நூலக அலுவலர் திரா. சரவணகுமார்,கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல், முருகன் மாநகராட்சி உதவியாளர்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி தொடர்பு அலுவலர் மு. சுதாகர், கிளை நூலகர் செந்தில்குமார், வாசகர் வட்ட தலைவர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வ.வே.சு வாழ்க்கை வரலாறு:

வரகனேரி வெங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்கின்ற வ. வே.சு ஐயர் ரெண்டு நாலு 1981 அன்று பிறந்தார். இவர் வரகனேரி சிங்கம் என்று அழைக்கப்பட்டார். இவர் தனது 12 வது வயதில் தனது மாமன் மகள் பாக்கியலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.12 வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்றார். 16 வயதில் பி.ஏ பட்டம் பெற்றார்.1901 ஆம் ஆண்டு ச சட்டம் பயின்று 19 வயதில் வழக்கறிஞர் ஆனார். திருவள்ளுவர் இயற்றிய 1330 குறள்களையும் கம்பராமாயண கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

1917 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் புதுச்சேரி வருகையின் போது காந்தியடிகளின் சக்தியால் பயங்கரவாதி என்ற போர்வையை கலைத்து எறிந்து விட்டு அகிம்சவாதியாக மாறியவர்.1921ல் தேசபக்தர் எனும் தமிழ் தினசரியில் ஆசிரியராக இருந்த போதும் வேறு ஒருவர் எழுதிய தலையங்கத்திற்காக ராஜ துரோகம் குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் 9 மாதங்கள் அடைக்கப்பட்டார்.1923 இல் சேரன்மாதேவியில் குருகுலம் துவங்கி குருகுல கல்வியை புகட்டினார்.1925 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் தமது குருகுல மாணவர்களை உல்லாச பயணமாக பாபநாசத்திற்கு அழைத்துச் சென்றபோது தனது மகள் சுபத்திரியை கல்யாண தீர்த்தத்தில் தவறி விழுந்தபோது காப்பாற்ற சென்றபோது வ.வே.சு ஐயர் அவர்களும் சுழலில் சிக்கி மரணம் அடைந்தார்.

இவர் வாழ்க்கை முழுவதும் எளிமையாக வாழ்ந்தார் நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனை எதிர்த்துப் போராடி தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர். திருச்சிராப்பள்ளி வரகனேரியில் உள்ள இவர் வாழ்ந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு   தற்போது வரகனேரியில்   கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு வரகனேரியை  சுற்றியுள்ள தன்னார்வலர்கள், இளைஞர்கள் புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தினமும் இந்த நுலகத்திற்கு வந்து புத்தகங்களை வாசித்து தங்களை அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.

மேலும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுக்கு தேவையான புத்தகங்களும் இந்நூலகத்தில் உள்ளது. இந்த நூலகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision