20 வருடமாக பொது செயலாளர் கணக்கு காட்டவில்லை - உதயமாகும் புதிய தனியார் பள்ளி சங்கத்தினர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தில் பிரிவு ஏற்பட்டுள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் நிர்வாக நியமனங்களில் ஜனநாயகம் மற்றும் முறையில் நடந்து கொள்வதாகவும், ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாகவும், அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க தாவும் குற்றம்சாட்டி அச் சங்கத்திலிருந்து விலகி புதிய சங்கம் உருவாகியுள்ளது. துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்த ஸ்ரீதர் தற்பொழுது உதயமாக உள்ள புதிய சங்கத்திற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட்ல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது..... தமிழகத்திலுள்ள 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்தவர்கள் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சங்கத்தில் வரவு- செலவு கணக்கு காட்டப்படுவதில்லை. சங்கத்தின் பொதுச் செயலாளர் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறார். கொரோனா காலத்தில் கூட பள்ளிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டார். எனவே அச்சங்கத்தில் இருந்து 90% பேர் எங்களுடன் வந்து விட்டனர். அரசுடன் இணக்கமாக பேசி எங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்போம்.