திருச்சியில் 30% சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி கண்காட்சி - ஆட்சியர் தொடங்கி வைப்பு!

திருச்சியில் 30% சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி கண்காட்சி - ஆட்சியர் தொடங்கி வைப்பு!

திருச்சி மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மூலம் 30 % சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று தொடங்கி வைத்தார்.

Advertisement

திருச்சி மாநகராட்சி உறையூர் சாலைரோட்டில் G.K.M மினி ஹாலில் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மூலம் பொங்கல்-2021 பண்டிகையை முன்னிட்டு 30 % சிறப்பு கைத்தறி கண்காட்சி மத்திய ஜவுளி துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலமாக 29.12.2020 முதல் 12.1.2021 வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கைத்தறி கண்காட்சியில் சேலம், நாமக்கல், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 52 நெசவாளர் சங்கம் சுமார் 42 அரங்குகள் அமைத்து கண்காட்சியில் இடம் பெறவுள்ளது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் சேலைகள், வேட்டிகள், பெட்ஷீட்டுகள், திரை சீலைகள், துண்டுகள், லுங்கிகள் மற்றும் அனைத்து ரகங்களும் நவீன வடிவமைப்பிலும் நேர்த்தியான வண்ணங்களிலும் 30 % அரசு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு கண்காட்சியில் 50 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 41 இலட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சிறப்பு கைத்தறி கண்காட்சிக்கு விற்பனை இந்த ஆண்டு இலக்கு ரூ .5.5.0 M) இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி கண்காட்சி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். பொது மக்கள் கைத்தறி ஜவுளி ரகங்களை வாங்கி பயனடையும்மாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் கார்த்திகேயன் கைத்தறி நெசவாளர் சேவை மையம் சேலம், கைத்தறி உதவி இயக்குநர் எம்.எஸ்.கே. சூரியா, கைத்தறி மற்றும் துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் சு.சுப்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.