திருச்சியில் டிசம்பர் 31-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!!

திருச்சியில் டிசம்பர் 31-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!!

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 31.12.2020 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31.12.2020 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ளது. ஜப்பான் Hitachi நிறுவனத்தின் கிளை நிறுவனமான சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. 

இந்நிறுவனத்தில் டிப்ளமா படிப்பில் DEEE/ DECE/ DICE/ DME/ DAE/ MECHATRONICS ஆகிய பிரிவில் 2018 மற்றும் 2019-2020 ஆண்டில் முடித்த 21 வயதுகுட்பட்ட

பெண்கள் மட்டும் இந்நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Advertisement

இந்நேர்காணலில் தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்கள் மூன்று நிலையில் (Personal Interview/ Technical HR Interview (Through Phone)/ Medical Fitness நேர்காணல் நடைபெறும். இம்மூன்று நிலைகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் நேரடியாக பணி நியமனம் வழங்கப்படும். இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (TC Marksheet, Ration card, Aadhar Card) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் 31.12.2020 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சிக்கு நேரில் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO