திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறி - குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது!!

திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறி - குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது!!

திருவானைக்கோவில் மேல விபூதி பிரகாரத்தை சேர்ந்தவர்  கணேசன். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் திருவானைக்கோவில் டிரங்க் ரோடு அழகிரிபுரம் சந்திப்பு அருகில் நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த திருவானைக்கோவில் பாரதி தெருவை சேர்ந்த மணிகண்டன், நரேஷ்குமார் (எ) நரேஷ் மற்றும் நடுகொண்டையம்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் ஆகிய இருவரும் மேற்படி நபர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கணேசன் சட்டைப்பையில் இருந்த 1100 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு சென்றுள்ளனர்.

Advertisement

இதுகுறித்து கணேசன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் புலன் விசாரணைக்கு எடுத்துகொண்ட ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், நரேஷ்குமார் (எ) நரேஷ் மற்றும் நடுகொண்டையம் பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோர்களை கடந்த மாதம் 5ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

இவ்வழக்கின் விசாரணையில் மணிகண்டன்(24), நரேஷ் ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரியவருவதாலும், இவர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் படி 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார். அதன்பேரில் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement