பகல் பத்து எட்டாம் நாள் உற்சவம் - நம்பெருமாள் ரத்தின கிரீடம், ரத்தின அபயஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி

பகல் பத்து எட்டாம் நாள் உற்சவம் - நம்பெருமாள் ரத்தின கிரீடம், ரத்தின அபயஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவத்தின் 8ம் திருநாள் இன்று திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக,

நம்பெருமாள் மஞ்சள் பட்டு அணிந்து, முத்து சாயக் கொண்டையில், நெற்றி சுட்டிப்பூ சாற்றி, மகர கர்ண பத்திரம்; வைர அபய ஹஸ்தம்; திரு மார்பில் பங்குனி உத்திர பதக்கம், சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; அதன் கீழ் சிகப்பு கல் அரசிலை பதக்கம்; சிகப்புக் கல் அடுக்கு மகர கண்டிகை ஹாரங்கள்; 6 வட (18 பிடி) முத்து சரம் அணிந்து,

பின்புறம் - முத்துக் கபா (முத்து அங்கி) தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision