அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

இன்று 04/04/2025 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி & ANTI DRUG CLUB மற்றும் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் தொடங்கி அண்ணா வளைவு பகுதியை சுற்றி மீண்டும் கல்லூரி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.கல்லூரியின் முதல்வர் திரு M.தமிழ்ச்செல்வம் கொடி அசைத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.திரு B.பரமசிவக்குமார்(Anti Drug Club SPOC)

 அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார்.திருமதி M.யசோதா (காவல் ஆய்வாளர்) போதைப்பொருள் தடுப்பு பிரிவு-திருவெறும்பூர் மற்றும் திரு நாகராஜ் துணை ஆய்வாளர் துவாக்குடி காவல் நிலையம் ஆகியோர் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்கள்.திரு மரு.தே.பாலமுருகன் முதுநிலை குடிமை மருத்துவர்.நவல்பட்டு மற்றும் திருமதி உமா(ICTC ஆலோசகர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியை சிறப்பாக ஏற்பாடு செய்த மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் & தலைவர் திரு டி.செல்வராஜ், மாநில துணைத்தலைவர் திருமதி இ.ரூபாதேவி, மாநில ஆலோசகர் திரு இ.தயாளன், மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி மு.சத்யா, மாநில மகளிர் அணி துணை செயலாளர் திருமதி காயத்திரி, திருச்சி மாவட்ட செயலாளர் திரு கொளஞ்சியப்பன், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி ரேகா, திருச்சி

மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி லதா, திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு இ.அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் தண்ணீர் பாட்டில் பீஸ் கட் கொடுக்கப்பட்டது.சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசாக சீல்டு

வழங்கப்பட்டது.திருமதி Dr கவிதா Lecturer/Anti Drug Club Member அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.இந்த பேரணிக்கு பாதுகாப்பு வழங்கிய காவல் துறை அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision