இது நியாமா? அமைச்சருக்கு அறப்போர் இயக்கம் கேள்வி?

இது நியாமா? அமைச்சருக்கு அறப்போர் இயக்கம் கேள்வி?

ஒரு மாநில அமைச்சர் பொது மக்களின் பிரச்சனைகளை பேசும், ஊழலுக்கு எதிராக ஆதாரங்களுடன் புகார் கொடுத்து போராடும் அமைப்பை பிளாக் செய்து வைப்பது தான் ஜனநாயகமா? நியாயமான கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால் பிளாக் செய்வது தான் உங்கள் மாடல் ஆட்சியா? 

உங்கள் பிறந்த நாளுக்கு மவுண்ட் ரோட் நடைபாதையை மறித்து பிரம்மாண்ட கட்சி கொடி கம்பம் வைத்ததை கேள்வி கேட்டு அகற்ற வைத்ததால் பிளாக் செய்தீர்களா? அல்லது உங்கள் தொகுதியில் மாநகராட்சி பள்ளிக்கூடத்தை இடித்து கல்யாண மண்டபம் கட்டும் திட்டத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தியதால் பிளாக் செய்தீர்களா? அல்லது உங்களை வரவேற்க முதல்வர் அறிவுரையை சட்டை செய்யாமல் உங்கள் கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்ததை சுட்டிக் காட்டியதால் பிளாக் செய்தீர்களா? 

எதற்காக பிளாக் செய்தீர்கள் என்று தைரியமாக சொல்வீர்களா? உங்கள் கட்சியின் இணைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அருவருப்பான ஆபாச தாக்குதல்களை எல்லாம் எதிர்கொண்டு தொடர்ந்து அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும் என்றால்

அந்த பணியை இன்னும் சிறப்பாக தீவிரமாக அறப்போர் செய்யும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். விமர்சனங்களை தைரியமாக ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கும் பக்குவம் உங்களுக்கு விரைவில் வளரட்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision