திருச்சியில் திமுக பாஜகவினர் மோதல் போலீசார் குவிப்பு

திருச்சியில் திமுக பாஜகவினர் மோதல் போலீசார் குவிப்பு

திருச்சி காமராஜபுரம் பகுதியில் நியாய விலை கடையில் பிரதமர் மோடி படத்தை வைக்க வந்த பாரதிய ஜனதா கட்சி மண்டல்(கண்டோடன்மென்ட்) தலைவர் பரமசிவம் போது திமுகவினர் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் .திருச்சி மாநகராட்சி 55வது வார்டு மாமன்ற உறுப்பினர்   ராமதாஸ் அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் பரமசிவன் சிகிச்சை பெற்று வருவதாக பாஜகவினர் தெரிவித்தனர்.திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி படத்தை உடைத்து சாக்கடையில் போட்டு உள்ளதாகவும் அதை சிமெண்ட் பலகை வைத்து மூடி உள்ளதாகவும் இதனால் பாஜக திமுக இடையே தொடர்ந்து தள்ளுமுள்ளு வாக்குவாதம் காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

 பிரதமர் படத்தை கிழித்து சாக்கடையில் வீசிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கத்திடம் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுர கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொன்னகர் நியாய விலை கடை தற்பொழுது காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி படத்தை நியாய விலை கடையில்  வைப்பதற்காக ஒரு படமும் கையில் ஒரு படமாக வைத்திருந்தனர்.அதில் ஒன்று கிழித்து சாக்கடையில்  வீசியதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சினை பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO