முருக கடவுளாக காட்சியளித்த 6 வயது சிறுவன்

முருக கடவுளாக காட்சியளித்த 6 வயது சிறுவன்

 திருச்சி கேகே நகர் பகுதியைச் சேர்ந்த ரகு மற்றும் சசிகலா ரகு தம்பதியரின் ஆறு வயது  மகன்  ஆத்விக்.இச்சிறுவன் தன்னுடைய நான்கு வயது முதல் மாடலிங் துறையில் அசத்தி வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளில் பலமேடைகளில்   (Rampwalk ) இல் பங்கேற்றிருக்கிறார்.கிட்ஸ் மாடலிங், விளம்பரம் என்று உற்சாகமாய் இருக்கும் ஆத்விக் தன்னுடைய  மற்றொரு பரிமாணத்தை  வெளிபடுத்தியுள்ளார்.  முருகர் அவதாரம் எடுத்திருக்கிறார் ஆத்விக்.

இதுகுறித்து ஆத்விக்
 தாயார் சசிகலா கூறும்பொழுது, தொடர்ந்து மாடலிங்கில் பல போட்டோஷூட் என்று இருக்கும்பட்சத்தில் முருகர் வேடத்தில் ஆத்விக்கை பார்க்க வேண்டும்  என்பது என்னுடைய ஆசை அதற்கேற்றவாறு தைப்பூசத்தில் அதை செய்துபார்க்கலாம்  என்று எண்ணிக் கொண்டிருந்தோம் அப்போது அதனை முறையாக செய்ய வேண்டும் என்று ஒரு மாத காலம் மருதமலை முருகனுக்கு  விரதமிருந்து  பக்தியோடு கடைப்பிடித்து வந்தோம்.


 நாங்கள் இருப்பதைப்போல்   சிறுவயதில் ஆத்விக்  பக்தியோடு இருந்தான். ஆத்விக்கிற்கும் முருககடவுளை மிகவும் பிடிக்கும். சமூக வலைதளங்களில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின்  முருகன் வேடமணிந்த புகைப்படத்தை பார்த்த போது இன்னும் அதிக ஆர்வம் ஏற்பட்டு இதனை செய்தாக வேண்டும் என்று எண்ணினோம்.

இதற்காக தெய்வீக கலைமிக்க   புகைப்பட கலைஞர்  தேடிக் கொண்டிருந்தபோது சென்னை போரூரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஐய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த புகைப்படக்கலைஞர்  ஹர்ஷத் ஜியினை தொடர்புகொண்டோம்.இந்த புகைப்படம் எடுக்கும் நாளன்று கிட்டத்தட்ட 5 மணி நேரம் இதற்கான ஒப்பனை நடைபெற்றது.ஐந்து மணிநேர ஒப்பனையின் போது   ஆத்விக் காட்டிய  ஆர்வமும் ஈடுபாடும் எங்களை வியப்புக்குள்ளாக்கியது.

குழந்தைகளில்  தெய்வத்தைக் காணலாம் என்ற வாக்கியமே தெய்வ உருவமாக மாறி நின்ற என் குழந்தையை  பார்க்கும்போது  அனைவருக்கும் ஒரு நிமிடம் முருகக் கடவுளே  நேரில் வந்து நிற்பது போன்ற ஒரு மாயையை கண்முன் நிகழ்த்தினான் ஆத்விக் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn