திருச்சி நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டில் நடந்து சென்ற இளைஞர் மீது காளை முட்டியதில் பலி - 31 பேர் காயம்

திருச்சி நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டில் நடந்து சென்ற இளைஞர் மீது காளை முட்டியதில் பலி - 31 பேர் காயம்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி காலை 10 மணிக்கு தொடங்கியதில் 800 மாடுகளும், 300 மாடுபிடி வீரர்களும் வந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட நேரம் குறைவாக இருப்பதால், மாடுகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டுமென போட்டி ஏற்பாட்டாளர்களிடம் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இன்னொரு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நவலூர் குட்டப்பட்டு வாடிவாசலில் திறக்கப்பட்ட காளை  நவலூர் குட்டப்பட்டு பாரதி நகரை சேர்ந்த வினோத் ( 24 ) தெருவில் நின்ற போது இளைஞரை முட்டி தள்ளியது .  இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

தற்போது அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.7 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn