ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட ரூ.20லட்சம் சைபர் கிரைம் மூலம் மீட்பு - காவல் ஆணையர் தகவல்

ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட  ரூ.20லட்சம் சைபர் கிரைம்  மூலம் மீட்பு - காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெறவதை தடுக்கும் வகையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

அதன்படி கடந்த 02.02.2022-ந்தேதி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரெங்கராஜன் என்பவர் திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரில் கடந்த 30.01.2022ந்தேதியன்று மனுதாரரின் BSNL சிம் கார்டு காலாவதியாகப் போவதாகக் BSNL அதிகாரி என்று கூறி மனுதாரரை அவரது அலைபேசி மூலம் Quick Support App-யை டவுன்லோடு செய்து அதன் மூலம் ரூ.10/-க்கு ரீசார்ஜ் செய்யுமாறு கூறினார்.

மனுதாரர் தனது Internet Banking விவரங்களை பதிவு செய்தவுடன் தனது வங்கி கணக்கிலிருந்து பணம் ரூ.5,48,919/- எடுக்கப்பட்டதாகவும், மேலும் திருச்சி பீமநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு SBI வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசிய நபர் தங்களது ATM கார்டு காலாவதியாகப் போவதாகக் கூறியதை உண்மை என நம்பி மனுதாரர் தனது வங்கி கணக்கின் முழுதகவல் மற்றும் OTP விவரங்களை கூறியவுடன், மனுதாரரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.17,45,000/- பணம் எடுக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார்.

தங்களை ஏமாற்றிய நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அவர்களால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முறைகேடாக நடைப்பெற்ற பண பரிவர்த்தனைகளை ஆராய்ந்ததில் மேற்படி மனுதாரர் ரெங்கராஜன் என்பவர் இழந்த பணத்தில் ரூ.3,00,000/- மற்றும் மனுதாரர் ராமகிருஷ்ணன் என்பவர் இழந்த பணத்தில் ரூ.17,00,000/-ம் ஆக மொத்தம் ரூ.20,00,000/- மீட்கபட்டு அவரவர் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.

மேலும் மோசடி நபரின் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் இதுபோன்று யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்: 1930 அல்லது 155260 என்ற எண்களை விரைவாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும், அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. திருச்சி மாநகரில் இதுபோன்ற ஆன்லைன் மூலம் பணமோசடி ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர்  தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj


#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO