ஒரே மாதத்தில் உடையும் திருச்சி மாநகர புதிய சாலைகள் - ஆதாரத்துடன்
திருச்சியை 2வது தலைநகராக ஆக்க வேண்டும் முயற்சியில் இங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க திருச்சி மக்களின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
தற்போது மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக தோன்றப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாததால் வாகனங்கள் சிக்கியும், பாதசாரிகள் விழும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து திட்டங்கள் நிறைவு பெற்ற பின் அந்த சாலைகள் மோசமானதால் ஆங்காங்கே புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தத் தார் சாலைகளின் நிலை என்ன? என்பது குறித்து அறப்போர் இயக்கம் நேரடி கள ஆய்வு செய்துள்ளது.
இதில் புதிதாக போடப்பட்ட சாலையின் தரம் உறுதித்தன்மை ஆகியவை குறித்து ஆதாரத்துடன் பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர். மேலும் இதுகுறித்து பல்வேறு சந்தேகங்களை பற்றி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision