திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!

Advertisement

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

Advertisement

கொரோனா காலகட்டத்திற்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சியில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு குறைதீர்க்கும் நாள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

Advertisement

தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ளபெட்டியில் மனுக்களை போட்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்தும் இன்று முதல் நடைபெறும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்தார்.

11 மாதங்களுக்கு பிறகு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளி பின்பற்றியும் முக கவசங்கள் அணிந்து தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்தனர்