ரயில் தண்டவாளத்தில் டயர் விவகாரம் - 5 தனிப்படை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ரயில்வே தண்டவாளத்தில் நேற்று (02.06.2023) மர்ம நபர்கள் லாரி டயரை ரயில் தண்டவாளத்தில் வைத்து உள்ளனர். இதனால் கன்னியாகுமரி விரைவு ரயில் இன்ஜின் பகுதியில் டயர் மாட்டி நான்கு பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதைப்பற்றி தகவலறிந்த திருச்சி ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் ரயில்வே போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தண்டவாளத்தில் லாரி டயரை வைத்த அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும், அதற்கான தடயங்களையும் சேகரித்தனர்.
இதனால் கன்னியாகுமரி விரைவு ரயில் 20 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் மேலவாளாடி பழைய ரயில்வே கேட் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் இப்பகுதி மக்கள் நடத்தி வந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்று உள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் தான் நடத்தினார்களா? அல்லது வேறு ஏதாவது தீவிரவாத செயலா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (03.06.2023) இரவு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சி அருகே மேல வாளாடியில் ரயில் தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்களை வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இருப்பு பாதை காவல் துறை சார்பாக இரண்டு தனிப்படைகளும் ரயில்வே பாதுகாப்பு படை ஒரு தனிப்படையும் லால்குடி காவல் நிலைய போலீசார் ஒரு தனிப்படையும் அமைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை ஆய்வாளர் தலைமையில் ஒன்று அமைக்கப்பட்டு ஐந்து தனிப்படைகளாக தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn