50 ஆயிரம் பணம் கொடுத்த திருச்சி காவலருக்கு குவியும் பாராட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல்காரன்பட்டி சேர்ந்தவர் ராஜ்குமார் (43). இவர் மணப்பாறை நகரப் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் குழந்தைகளுக்கு காதணி விழா வைப்பதற்காக திருச்சியில் உள்ள அவரது அண்ணன் அர்ஜுனன் என்பவரிடமிருந்து 50,000 ரூபாயை வாங்கிக் கொண்டு மணப்பாறைக்கு வந்தார்.
பின்னர் பேருந்தை போக்குவரத்து பணிமனையில் பேருந்து நிறுத்திவிட்டு மீண்டும் அவரது சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் முன்புறம் பணத்தை வைத்துக் கொண்டு சென்ற போது வண்டியிலிருந்து பணம் தவறி மணப்பாறை பேருந்து நிலையம் முன்புறம் தவறி விழுந்துள்ளது.
இதை கவனிக்காத ராஜ்குமார் வீட்டிற்கு சென்று பணத்தை பார்த்த போது ஐம்பதாயிரம் ரூபாயை பணம் காணவில்லை. இது பற்றி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவலர் நாராயணன் பணியில் இருந்து போது பேருந்து நிலையத்தின் முன்பு கடந்த ஐம்பதாயிரம் ரூபாய் கீழே கிடந்துள்ளது.
அந்த பணத்தை மீட்டு மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனை அடுத்து பணத்தை தவறவிட்ட ராஜ்குமார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமாரை காவல் நிலையம் அழைத்து அவர் தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாயை மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் மற்றும் போக்குவரத்து காவலர் நாராயணன் ஆய்வாளர் கோபி ஆகியோர் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பணத்தை மீட்டு ஒப்படைத்த போக்குவரத்துக் காவலர் நாராயணனை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன் பொன்னாடை போர்த்தி பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
தவறி விழுந்த பணத்தை எடுத்து நேர்மையான முறையில் ஒப்படைத்த போக்குவரத்து காவலர் நாராயணனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn