கருப்பசாமி கோயிலுக்கு 27 அடி உயர அரிவாள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த காவல்காரன்பட்டியில் உள்ள மலையாள கருப்பசாமி மந்தை கோயில் அருகே, பிரமாண்டமான 27 அடி உயர (இரும்பு) 18ஆம் படி கருப்பசாமி அரிவாள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
அதற்கான கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல் சாலையில் உள்ள பட்டறையில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் சுமார் ஒன்றரை டன் எடையிலான இரும்பு கொண்டு 27 அடி உயர கருப்பசாமி அரிவாள் செய்யப்பட்டது.
அரிவாள் செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அரிவாள் ஆலயத்திற்கு எடுத்து செல்லும் பணிகள் நடைபெற்றது. 27 அடி கருப்பசாமி அரிவாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கிரேன் மூலம் அரிவாள் லாரியில் ஏற்றி ஆலய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 27 அடி உயர அரிவாளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் கணபதி ஹோமத்துடன் யாகவேள்விகள் நடைபெற்று 27 அடி உயர 18-ஆம் படி கருப்பசாமி அரிவாளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision