மணப்பாறை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த மினி லாரி 3 பேர் உயிரிழப்பு –  7 பேர் படுகாயம்

மணப்பாறை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த மினி லாரி 3 பேர் உயிரிழப்பு –  7 பேர் படுகாயம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் மாலையில் பாதையாத்திரையாக சமயபுரம் புறப்பட்டனர். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து பயணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து தக்காளி ஏற்றி சென்ற ஈச்சர் லாரி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டியான்பட்டி பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற பக்தர்களுக்கிடையே புகுந்தது.

இதில் நடுப்பட்டி சீகம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, எரியோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சேகர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ரம்யா, மணிகண்டன், முத்துபாண்டி என 3 பெண்கள் உள்ளிட்ட 7 பக்தர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நெடுஞ்சாலை விபத்து மீட்புக்குழு மற்றும் போலீஸார் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனைவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு பெண் பக்தர் ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருநாவுக்கரசு, சேகர் உடல்கள் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீஸார் விபத்து ஏற்படுத்திய ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn