திருச்சியில் 100 மாறுவேடங்களில் கலந்துக்கொண்ட குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை வகித்தார். மணப்பாறை கல்வி மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
கலைக் காவிரி கல்லூரி உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார், ரோட்டரி கிளப் ஆஃப் ஜம்புகேஸ்வரம் அமைப்பின் செயலாளர் அப்பாஸ் மந்திரி, தலைவர் மக்தூம் மைதீன், பாலகிருஷ்ணன் மதிவாணன் பாலசுப்ரமணியன், அப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்வில் 100 குழந்தைகள் 100 மாறுவேடங்கள் ஒப்பனை அணிந்து வந்தனர். நேரு, காந்தி, கொடிக்காத்தக் குமரன், அப்துல்கலாம், விவசாயிகள், இந்திராகாந்தி, மருத்துவர்கள், ராதை, சீதை, கொரோனா, உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு வருகைப் புரிந்தனர்.
அனைவருக்கும் ரோட்டரி கிளப் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, துணைத்தலைமை ஆசிரியர் புஷ்பலதா, உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn