மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்ற திருச்சி தேவகி விஜயராமன்

மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்ற திருச்சி தேவகி விஜயராமன்

இந்த வருடத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் சில பிரம்மாண்ட ஷோக்கள் தொடங்கப்பட்டது. சன் டிவியில் மாஸ்டர் செப்ஃ, விஜய்யில் பிக்பாஸ் 5, ஜீ தமிழில் சர்வைவர் என இன்டர்நேஷ்னல் ஷோக்கள் தமிழில் தொடங்கப்பட்டன.

இந்த 3 ஷோக்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சர்வைவர் ஷோ முடிவுக்கு வர இருக்கும் நிலையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று இரவு ஒளிபரப்பாகியது. 14 போட்டியாளர்களில் 10 பேர் அடுத்தடுத்து எலிமினேட் ஆகி 4 பேரோடு இறுதிப்போட்டி நடைப்பெற்றது. வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் பைனலிஸ்ட் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 54/60 மதிப்பெண் பெற்று தேவகி வெற்றி பெற்றார். மாஸ்டர் செப்பில் டைட்டில் வின்னர் தேவகி விஜயராமன் ஆரம்பத்திலிருந்தே சமையல் மீது ஈடுபாடும் இருந்துள்ளது. 

திருச்சியை சேர்ந்த தேவகி, தன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்பு சமையல் மீதுள்ள ஆர்வத்தால் ஐடி வேலையில் இருந்து வெளியேற்றி விட்டார். தன் வீட்டிலேயே கேக் செய்து விற்க தொடங்கியுள்ளார். அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவுடன் தனியாக ஒரு கடை ஆரம்பித்து பெரிய அளவில் வியாபாரம் செய்து வருகிறார்.

இதனால் இவருக்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது தேவகி முதலிடத்தைப் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார். அத்துடன் 25 லட்சம் பரிசு தொகையும் தேவகிக்கு வழங்கப்பட்டது. வாழ்வில் நமக்கு பிடித்தவற்றை அதிக ஈடுபாடோடு செய்யும் பொழுது அதற்கான அங்கீகாரம் நம்மை வந்தடையும் என்பதற்கு தேவகி விஜயராமன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn