பதக்கங்களை வென்று திரும்பிய வீரர்களுக்கு திருச்சியில் மேள, தாளத்துடன் வரவேற்பு

பதக்கங்களை வென்று திரும்பிய வீரர்களுக்கு திருச்சியில் மேள, தாளத்துடன் வரவேற்பு

ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டுப்போட்டிகள் சீனா தைபேயில் கடந்த 18ம்தேதி தொடங்கி 28ம் தேதிவரை நடைபெற்றது. 14நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில்

இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 19வயதிற்குட்பட்ட ஆடவர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆடவர் ஸ்கேட்டிங் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற திருச்சியைச் சேர்ந்த குகன், ஜெகன் ஆகிய இருவரும், மகளிர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற 5பேரும் விமானம் மூலம் இன்று மாலை திருச்சி வருகை புரிந்தனர்.

விமானநிலையத்தில் பதக்கங்களை வென்று பெருமைசேர்த்த வீரர், வீராங்கணைகளுக்கு ரோலர்ஸ் கேட்டிங் அசோசியேசன் சார்பில் மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள் என பெருந்திரளானோர் திரண்டுவந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் அரசு தரப்பில் எந்தஒரு உதவியும் வழங்கப்படவில்லையென்றும், சொந்த செலவிலேயே போட்டிகளில் பங்கேற்றதாகவும், அரசு உதவிபுரிந்திருந்தால் நன்றாக இருக்கும் என வீரர்கள் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision