தேசிய பாரா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி சிறுவன்

தேசிய பாரா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி சிறுவன்

தேசிய அளவிலான பாரா  நீச்சல் போட்டியில்  திருச்சியை சேர்ந்த  சிறுவன் தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளான்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற  தேசிய அளவிலான பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட திருச்சியை சேர்ந்த ஜமால் என்ற சிறுவன் தங்கம் வென்றுள்ளார்.
 இப்போட்டியை  கர்நாடகா பாரா  விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.தமிழ்நாடு பாரா விளையாட்டு அமைப்பு 
 இப்போட்டிகளில்  பங்குகொள்ள  தமிழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கர்நாடகாவிற்கு அழைத்து சென்றனர்.


 இரண்டு நாட்கள் நடைபெற்ற  போட்டிகளில் நீச்சல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சியை சேர்ந்த ஜமால் என்ற சிறுவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் .
இதுகுறித்த சிறுவனிடம் பேசியபோது  எனக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று அதையே என்னுடைய வாழ்க்கையில் வெற்றிக்காக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
 என்னால் முடியாது என்று கூறியவர்களிடம் என்னால் முடியும் என்று சாதித்துக் காட்ட விரும்பினேன் முழு முயற்சியோடு பயிற்சிகளில் ஈடுபடுத்தி  தங்கம் வென்று அனைவருக்கும் என்னுடைய வெற்றியை பதில் ஆக்கியுள்ளேன் என்கிறான்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW