கார்கில் போர் நாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம் இன்று!

கார்கில் போர் நாயகன் மேஜர் சரவணன் நினைவு தினம் இன்று!
This image has an empty alt attribute; its file name is images-2020-05-29T080104.183.jpeg
மேஜர் சரவணன்

மாரியப்பன் சரவணன்...இந்திய இராணுவ பீகார் ரெஜிமென்ட்டின் மதிப்புமிக்க அதிகாரி , கார்கில் போர் தியாகி… தனது கடைசி மூச்சு வரை போராடிய ஒரு துணிச்சலான போர்வீரன் என்று இந்திய வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்ட ஒரு பெயர். 

மேஜர் சரவணனின் தந்தை, லெப்டினன்ட் கர்னல் மாரியப்பன் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர். குடும்பத்தின் மூத்த மகனான சரவணனிற்கு ஐந்து வயது முதலே ராணுவ வாழ்க்கையை அறிமுகப்படுத்தியவர் அவரது தந்தை தான். துப்பாக்கியை கையில் ஏந்தவும் திறந்த எல்லைகளில் சுடவும் கற்றுக்கொடுத்து குருவாக மாறினார் சரவணனின் தந்தை. 

சரவணனிற்கு 16 வயதிலேயே தந்தை மாரியப்பன் உயிரிழக்க, குடும்பத்தின் அரணாகவும் தார்மீக ஆதரவாகவும் மாறினார். திருச்சி புனித வளனார் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்றவுடன் சென்னையில் உள்ள OTA -வில் 1994 ஆம் ஆண்டு சேர்ந்தார். பீகார் ரெஜிமென்ட்டின் முதல் பட்டாலியனில் நியமிக்கப்பட்ட சரவணன் மிகவும் அர்ப்பணிப்புடனும் கமாண்டோ, மேம்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் மற்றும் குளிர்கால போர் குறித்த படிப்புகளையும் மேற்கொண்டார். 

ஜம்மு-காஷ்மீரில் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சரவணனின் பட்டாலியன் மாற்றப்பட்டவுடன் தனது தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்றில் , தான் உற்சாகமாக இருப்பதாகவும் தனது திறனை நிரூபிக்க ஒரு வாய்ப்பிறகு காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்ததாக சரவணனின் சகோதரி கூறியுள்ளார். மேலும், மே 14, 1999 அன்று, தாய் அமிர்தவல்லிக்கு கடைசியாக அழைப்பு விடுத்த சரவணன்,  ‘நான் உங்களுக்கு ஒரு வீர் சக்ராவைப் பெற்று வருவேன்." என்று கூறியதாகவும் அவரது சகோதரி நினைவுகூர்கிறார். 

ஆபரேஷன் விஜய்-ன் பங்காக இருந்த சரவணன் மிகுந்த வீரத்துடன் சண்டையிட்டுள்ளார். ஆனால் போரின் இறுதியில், இந்திய மூவர்ண கொடி போர்த்தப்பட்ட வீட்டிற்கு சரவணனின் உடல் திரும்பி வந்தது. சடலமாக வீட்டிற்கு சென்றாலும் அவர் கூறியது போலவே அவரது தாய்க்கு 'வீர் சக்ரா' விருதை பெற்று தந்துவிட்டார். அந்த திருப்தியில் அவரது ஆன்மா அமைதியாக உறங்கியது என்றே கூறலாம். 

Paragraph

திருச்சியின் மைய பகுதியான வெஸ்ட்ரீ ரவுண்டானா அருகே மேஜர் சரவணனிற்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. வருடாவருடம் அவரது நினைவு தினமான மே 29 அன்று ஏராளமான மக்கள் அங்கு வந்து அவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.