மருத்துவ பாதுகாப்பு உடையில் திருச்சி சலூன் கடை!

மருத்துவ பாதுகாப்பு  உடையில் திருச்சி சலூன் கடை!

கொரோனா நோய் தாக்கத்தால் உலகம் முழுவதும் பலரும் பல வகையில் பாதிக்கப்பட்டு தான் வருகின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் படிப்படியாக ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இன்னிலையில் சலூன் கடைகளுக்கு தற்போது நிலவும் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் அனுமதி அளித்திருந்தது.பொதுவாக சமூக இடைவெளியை கடை பிடிப்பது சாத்தியமற்றது என்பதற்காக சலூன் கடைகளில் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. பின்பு பல வகைகள் கோரிக்கைகள் வைக்கப்பட்டு திறக்கப்பட்டது சலூன் கடைகள். தற்போது திருச்சியில் கொரோனாவிற்கே சவால் விடும் அளவிற்கு பாதுகாப்புடன் செயல்படும் சலூன் கடை பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது!

திருச்சி தில்லைநகர் ஐந்தாவது கிராசில் செயல்பட்டுவரும் சலூன் கடை தான் Blue Mountain.வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல கடைக்கு சென்றிருந்த நாங்களும் பலவித ஆச்சர்யங்களை கண்டு வியந்தோம். ஏதோ டாக்டர்கள் தான் முடி வெட்டுகிறார்களா என எண்ணினோம்! அந்த அளவிற்கு பாதுகாப்பு கவசங்களையும் உடைகளையும் அணிந்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றன. உடல் முழுவதும் கொரோனா பாதிக்காமல் தடுப்பு உடைகள் கைகளில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க் என முடி வெட்டி வருகின்றன. இது மட்டுமில்லாமல் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டெம்பரேச்சர் பரிசோதனை அவர்கள் கைகளுக்கு கிளவுஸ், மாஸ்க் போன்றவற்றை கடை நிர்வாகமே வழங்குகின்றன.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் சிவாவிடம் பேசினோம்…சலூன் கடைகளால் தான் கொரோனா பரவும் என சிலர் பயப்பட்டார்கள்.அதற்காக உலகம் முழுவதும் சலூன் கடைகளில் எந்த விதமான வகையில் கையாளுகின்றன என தேடினேன்.இதில் இலங்கைத் தமிழர் ஒருவர் செய்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதே வகையில் என்னுடைய கடையிலும் உருவாக்க திட்டமிட்டேன். கொரோனோ பாதுகாப்பு உடைகள் மற்றும் முக கவசங்களை ஆர்டர் செய்து வெளியில் இருந்து வாங்கினேன்.

உரிமையாளர் சிவா

இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முழு பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு வகையில் செயல்பட்டு வருகிறோம். கட்டிங் செய்யும் போது தலையில் சனிடைசர் ஸ்பிரே அடித்து முடிவெட்ட ஆரம்பிக்கிறோம். சேவிங் செய்யும்போது யூஸ் அண்ட் த்ரோ பிளேடுகளை கொண்டு சேவிங் செய்கின்றோம். மேலும் முழுக்க முழுக்க ஒருவருக்கு பயன்படுத்திய பொருளை ஒருவருக்கு மட்டும் தான் பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் கண்முன்னாடியே அவற்றை அப்புறவும் படுத்துகின்றோம்.

வாடிக்கையாளர்களுக்கு கட்டிங், சேவிங் டூல் பாக்ஸை ஒன்றை வீட்டிற்கே என்றும் வழங்கி வருகிறோம். அதை அவர்கள் வீட்டில் இருந்தே பயன்படுத்திக் கொள்ளலாம்.முடி வெட்டுவதற்கு 160 ரூபாய் வாங்கினோம் இதுபோல் இதர செலவுகள் இருப்பதால் 30 ரூபாய் சேர்த்து 190 வாங்கி வருகிறோம். ஆனால் இது வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு வகையிலும் சங்கடத்தை ஏற்படுத்தவில்லை. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் முடிவெட்ட வந்து செல்கின்றனர்.என்றார்

கொரோனா காலகட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று! திருச்சியில் இதுபோல செய்வது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற சலூன் கடைகளும் இதுபோல பாதுகாப்பை பலப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்கின்றனர் மக்கள்!