வலசை வரும் பறவைகள் போன்று செயல்பட வேண்டும் - குழு ஒற்றுமையை விளக்குகிறார் மனிதவள மேம்பாட்டு துறை நிபுணர்!!

வலசை வரும் பறவைகள் போன்று செயல்பட வேண்டும் - குழு ஒற்றுமையை விளக்குகிறார் மனிதவள மேம்பாட்டு துறை நிபுணர்!!

பெருகிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பல நிறுவனங்களும் நிறுவப்பட்டு வருகிறது. உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளில் இருந்து கடைநிலையில் இருக்கும் பணியாளர்கள் வரை பலரும் இணைந்து செயல்படும் பட்சத்தில் நிறுவனத்தின் மதிப்பும், பணியாளர்களின் வாழ்க்கை தரமும் மேம்படும் வாய்ப்பு அதிகம். ஆனால் அனேகமாக இங்கு சில இடங்களில் ஒற்றுமையும், கருத்து முரண்களும் ஏற்பட்டு அது அனைவருக்குமே எதிர்வினையை ஏற்படுத்தி வருகிறது.

எந்த கட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களாக, அதிகாரிகளாக இருந்தாலும் சில விஷயங்களை மனதில் கொண்டால் அனைவருக்குமே நன்மை பயக்கும் என கூறும், தனியார் நிறுவன மனித வள மேம்பாட்டு துறை நிபுணர் விஜிலா ஜாஸ்மின் விளக்குகிறார்.

நிறுவனம் என்றால் அதில் டீம் முக்கியமானது, டீம் இருக்குமிடத்தில் ஒற்றுமை கண்டிப்பாக வேண்டும். அதுதான் நிறுவனங்களின் ஆணிவேர். வலசை செல்லும் (migrated birds) பறவைகளை நாம் பார்த்திருப்போம். பெரும்பாலும் அது 'V' என்ற வடிவிலேயே பறக்கும். இதில் விரியும் V க்கு இடையில் நடுவில் பறக்கும் பறவையே அந்த கூட்டத்திற்கு அப்போதைய தலைவன்.

அதனின் வழியை பின்பற்றி மற்ற பறவைகள் செல்வதற்கு ஏதுவாகவே அந்த வடிவில் பறக்கும். இது தனியாக பறக்கும் பறவையை விட 71% திறன் அதிகமாக இருக்கும். அதுபோல அந்த தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ ஒய்வு தேவைப்படுகிறது என்றாலோ அந்த கூட்டத்தில் அடுத்திருக்கும் பறவை வழிகாட்ட ஆரம்பித்து விடும்.

அதுமட்டுமில்லை தொடர்ந்து கூட்டத்தில் ஏதாவது ஒரு பறவைக்கு முடியவில்லை என்றால் மற்ற அனைவரும் அதனை, அதனின் போக்கில் பறக்க விடாமல் ஒன்றிணைந்து அந்த பறவையின் சூழலை உணர்ந்து அதனை சரிபண்ணவோ, அதனின் வழியில் சென்று மற்றொரு V வடிவத்தை அமைப்பதில் தவறுவதே இல்லை. கூடவே ஒரு பறவைக்கு இன்னொரு பறவை கொடுத்திடும் உத்வேகமும் அதிகம்.

இப்படி ஒன்றாக பயணப்பட்டு தங்களுடைய இடத்தை சென்று அடையும். இதே தான் மனிதர்களுக்கும் நாம் வேலை செய்யும் நிறுவனத்தின், டீமில் ஒற்றுமையுடன் இருப்பதும், மற்றவர்களை Empathize செய்வதும் முக்கியம். கூடவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்தை மதிப்பது, உத்வேகம் கொடுப்பதுடன், தான் தனியாக செய்துவிடுவேன் என்றில்லாமல், குழுவுடன் இணைந்து செயல்படும் போது அது 71% திறனுடையதாக இருக்கும் என்பதை மனதில் கொள்வதும் முக்கியம் என்கிறார்.

இதனால் நிறுவனத்தின் பணி முடிவடைவதுடன், அது நிறைவாகவும், அனைவருக்கும் பயனுள்ளதகாவும் இருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision