சாமானியர்களையும்  சாதிக்க தூண்டும் திருச்சி NIT மாணவர்கள்

சாமானியர்களையும்  சாதிக்க தூண்டும் திருச்சி NIT மாணவர்கள்

த. கார்த்திக் ராஜா

17.02.21

இனி சாமனியர்களும் சாதனையாளர்கள்தான் அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் திருச்சி NIT மாணவர்கள்.நுழைவுத் தேர்வுகளுக்கு உதவிட எத்தனையோ பயிற்சி கூடங்கள் பயற்சி பட்டறைகள் இருப்பினும் இந்த மாணவர்களின் குழு முயற்சியும் இலவச பயிற்சியும் உதவியாகவும் மிகச்சிறப்பாக உள்ளது. வசதிபடைத்தவர்கள் மட்டுமே வெல்ல முடியும் எனும் நிலைமாற அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டா கனியாக இருக்கும் JEE,நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து இலக்கை அடைந்திடலாம் என மெருகேற்றுகின்றனர் நம் சாதனைமாணவர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன் சஞ்சீவ் என்னும் NIT மாணவரால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ எளிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி இன்று Ignitte, Teaching club ஆக மாறி கல்லூரி மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் எண்ணற்றவர்களின் தேர்ச்சியாக உருவெடுத்துள்ளது.நேரடி வகுப்புகளில் தொடங்கிய இந்த இதயங்களின் சேவை இன்று இணையத்திலும் 60 பயிற்சியாளர்களுடன் செயல்படுகிறது எனவும் தற்போது NEET பயிற்சியும் தொடங்க இருப்பதாக பெருமையுடன் கூறுகிறான்றனர் நம் சாதனைமாணவர்கள்..

மேலும் தகவலுக்கு அதில் ஒரு பயிற்சியாளரான வைஷ்ணவியை தொடர்பு கொண்டோம் அவர் கூறியதாவது. 
                   நான் NIT ல் மூன்றாம் ஆண்டு B. Tech chemical engineering பயின்று வருகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் நீட் கொண்டுவரப்பட்ட காலக்கட்டம் அது நீட் தேர்வை பற்றி அரசுபள்ளிஸமாணவர்களிடம் இருந்த விழிப்புணர்வு கூட JEE தேர்வுகளைப்பற்றியில்லை எனவே அரசுபள்ளி மாணவர்களும் எளிதாக நுழைவுத்தேர்களை எழுத உதவி செய்திட எங்கள் கல்லூரி மாணவரான சஞ்சீவ் என்பவரால் இந்த கிளப் ஆரம்பித்தோம். தற்போது எங்கள் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பால் சிறப்பாக செயல்படுத்திவருகிறோம்.


அரசு தரப்பில் உதவிகள் ஏதேனும் உண்டா
              நாங்கள் இந்த பயிற்சியை தொடங்கிய காலத்தில் கல்லூரியை சுற்றியுள்ள அரசுபள்ளி மாணவர்களை தேர்வுசெய்து பயிற்சியளித்து வந்தோம். பிறகு மாவட்ட ஆட்சியர் உதவியுடன் மாவட்டக் கல்வித்துறை NIT இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து தற்போது மாணவர்களை NIT வளாகத்திற்கு அழைத்துவந்து பயிற்சியளித்தோம்.

பயிற்சி அளிக்க மாணவர்களை எவ்வாறு தேர்வு செய்திர்கள்❓
              திருச்சி சுற்றியுள்ள அரசுபள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வுகளை நடத்தி திறமையான மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்போம். 

பயிற்சி நேரம் எப்படி❓கொரோனா காலத்தில் பயிற்சி சவாலை எப்படி எதிர்கொண்டீர்கள்❓
                 கொரோனாவிற்கு முன் நேரடி வகுப்புகளாக இருந்த எங்கள் வகுப்புகளை இணைய வகுப்புகளாக மாற்றினோம். மாணவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் மேலும் கற்பித்தலை ஊக்கப்படுத்த ஒரு ஒரு பாடமும் பயிற்சியாளர்ளுக்குள் பகிர்ந்து கொண்டோம். மாணவர்கள் சந்தேகத்தை எந்த நேரத்திலும் போக்க அது எளிய வழியாக இருந்தது. பள்ளிகள் திறப்பிற்கு  பின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வார நாட்களிலும் வார இறுதிநாட்களில்  3 முதல் 4 மணிநேரம் வரை பயிற்சியளித்து வருகிறோம்.

*இக்னைட்-ல் இணைவது எப்படி❓*
                திறமையான மாணவர்களை திறனறித் தேர்வுகளின் மூலமே தேர்வு செய்து பயிற்சி அளித்துவருகிறோம். தற்போது கூட EUREKA the free mock test for JEE main எனும் நுழைவுத்தேர்வை  வரும் 20-21-2021 நாட்களில் நடத்த இருக்கிறோம். இதன் மூலம் கூட இந்த இரண்டு நாட்களில் மாணவர்கள் இயன்ற நேரத்தில் தேர்வுகளை எழுதலாம் என புன்முறுவலுடன் விடைபெற்றார் வைஷ்ணவி????.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM