கலையில் பல உலக சாதனைகளை நிகழ்த்தும் திருச்சியின் சாதனை மங்கை மீனா சுரேஷ்

கலையில் பல உலக சாதனைகளை நிகழ்த்தும்  திருச்சியின் சாதனை மங்கை மீனா சுரேஷ்

கலையின் மீதிருந்த ஆர்வமே எனக்கு கலை சார்ந்த பயணத்தை தொடங்குவதற்கான வழி வகுத்தது என்கிறார் திருச்சி சிவசக்தி அகாடமி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீனா சுரேஷ். தங்களது மாணவர்கள் மூலம் மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தி அடுத்தடுத்து2 உலக சாதனைகளையும் நிகழ்த்த காத்திருக்கும் மீனா சுரேஷ்  தன்னுடையபயணம் குறித்து பகிர்ந்து கொள்கையில், சிவசக்தி அகாடமி 21 ஜூன் 2012 அன்று தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சுமார் 7000 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். தற்போது, ​​எங்கள் நிறுவனத்தில் சுமார் 300 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாணவரின் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் தனிப்பட்ட அக்கறை எடுப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். பரதம், குரல் மற்றும் இசை மாணவர்களை பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்து அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறோம். உலகில் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம். நவீன யுகத்தில் இசைக் கலையின் அபரீத வளர்ச்சியை எடுத்துக்காட்ட வேண்டுமெனில், மருத்துவ துறையில் மியூசிக் தெரபி கொடுத்து, நோயை குணமாக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதுபோல் தென்மாநிலத்தின், குறிப்பாக, தமிழகத்தின் பாரம்பரிய நடனம் பரதம். இது மிக பழமை வாய்ந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பிரபலமானது. புராணவியல் ரீதியாக, பரத முனிவரால் உருவாக்கப்பட்டதாலேயே, 'பரதம்' என்ற பெயர் வந்தது.தமிழும் இசையும் பரதமும் பிரிக்க முடியாதவை. நாங்கள் பரதம், மேற்கத்திய நடனம், குரல் (கர்நாடக இசை), விசைப்பலகை, டிரம்ஸ், வரைதல், ஓவியம், மூளை 'ஓ' மூளை (திறன் மேம்பாட்டு படிப்பு), கைவினை, கையெழுத்து, கையெழுத்து, கணினி பாடநெறி, ஆரி வேலை, தையல், பேச்சு LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் ஆங்கிலம், பேச்சு இந்தி, யோகா, ஜூம்பா & டியூஷன் பயிற்சியும் அளித்து வருகிறோம்.

திருச்சியில் பல பிரமாண்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.சமீபத்தில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில், எங்கள் பரதம் மாணவர்கள் பங்கேற்றனர் பரதம், பாட்டு மற்றும் இசைக்கருவி பாடப்பிரிவுகளுக்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சான்றிதழை வழங்குகிறோம்.  மாணவர்களின் ஆர்வமும் எங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் எனலாம்..பல உலக சாதனைகளை செய்வதற்கு அவர்களின் ஆர்வமும் பங்களிப்பும் அத்தியாவசியமானது.

1: திருவானைக்கோயில் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் விருக்க்ஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக் கார்டு சார்பில் பரத நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி நடை பெற்றது. உலக சாதனை நிகழ்ச்சிக்காக சுமார் 800 மாணவ, மாணவிகள் பரத நாட்டியத்துடன், பாட்டு, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், கலைஞர்களும் தங்களது திறமையை காட்டினர். இரண்டாவது உலக சாதனையாக 2000 ஆண்டுகள் பழமையான கரிகால மன்னனால் கட்டப்பட்ட கல்லணையில் தமிழர்களும் விவசாயமும் தமிழர் மாண்பையும் பறைசாற்றும் வகையில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட பரத நிகழ்ச்சி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றது. மூன்றாவது உலக சாதனை சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் அம்மன் வேடம் அணிந்து பரதம் ஆடினர். அடுத்தடுத்து இரண்டு உலக சாதனைகளையும் நிகழ்த்த உள்ளோம்.

இப்படி பல சாதனைகளை நிகழ்த்தி வரும் மீனா சுரேஷ் சிறந்த தொழில் முனைவோர், சிறந்த சாதனை மங்கை மற்றும் சிறந்த பாரம்பரியமிக்க பெண்மணி என்ற பல விருதுகளை பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி மேலும் சிவ சக்தி அறக்கட்டளை மூலம் பல சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சாதனை மேல் சாதனை செய்து பல உலக சாதனைகளை நிகழ்த்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் மீனா சுரேஷ் திருச் சியின் சாதனை மங்கையாய் மிளிர்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision