ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி அதிகமாகுது உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை !!
நவீன உலகில் தவிர்க்க முடியாதது விஞ்ஞான வளர்ச்சி அதில் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம். அதில் விமானத்திற்கு தனியிடம் உண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருமுறையாவது பயணம் மேற்கொள்வதை தங்கள் லட்சியமாக கொண்டுள்ளனர்.
இந்திய உள்நாட்டு விமானப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் ஒரு கோடியே 3 லட்சமாக இருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் ஒரு கோடியே 22 லட்சம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 29.10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து பொது இயக்கக (டிஜிசிஏ) புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்த கட்டணம் வசூலிக்கும் விமானமாக கருதப்படும் இண்டிகோ நிறுவனத்தின் சேவை ரத்து மற்றும் காலதாமதம் கார ணமாக செப்டம்பரில் மட்டும் 76 ஆயிரம் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா நிறுவன கோளாறு காரணமாக 24 ஆயிரத்து 758 பயணிகளும், ஸ்பைஸ் ஜெட் நிறுவன கோளாறு காரணமாக 24 ஆயிரம் 635 பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணம் முக்கியமா? பாதுகாப்பான பயணம்தானே முக்கியம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision