தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி, கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி யில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 1200-க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர்.

மினிஸ்டர் ஜூனியர், சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 45 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 13 தங்கம், 6 வெள்ளி, 16 வெண்கலம் என 35 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ரயில் மூலம் திருச்சி ரெயில்வே ஜங்ஷனை வந்தடைந்த அவர்களுக்கு, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் விஜயகுமார், பயிற்சியாளர்கள் சரவணன், கமலேஷ் லோகநாதன், சேஷாத்திரி பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் விஜயகுமார் கூறும்போது.... தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திருச்சி மாணவர்கள் 35 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் வரும் டிசம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஏசியன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஏசியன் போட்டியிலும் நிச்சயமாக வெற்றி வாகை சூடுவோம்.

ஏசியன் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவர்களுக்கு ஸ்பான்சர் கிடைக்க விளையாட்டு துறை அமைச்சர் உதவி செய்ய வேண்டும். தமிழகத்தில் சிலம்ப ஆசான்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision