இன்று சூரிய கிரகணம் : ஆனால் தெரியாது !!

இன்று சூரிய கிரகணம் : ஆனால் தெரியாது !!

பஞ்சாங்களில் இருவரை உண்டு ஒன்று திருக்கணித பஞ்சாங்கம் மற்றொன்று வாக்கிய பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி புரட்டாசி மாத அமாவாசையான நாளை (14ம் தேதி) சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது... இந்துமத சாஸ்திரப்படி அமாவாசை நாட்களில் சூரியகிரகணம், பவுர்ணமி நாட்களில் சந்திர கிரகணம் ஏற்படும். வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி, சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணங்கள் மற்றும் ஒரு சந்திர கிரகணம் ஏற்படுகின்றன. ஏற்கனவே ஏப்ரல் 20ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டு, இந்தியாவில் தெரியவில்லை.

அதுபோல் அக்டோபர் 14ம் தேதி மகாளய அமாவாசை நாளில் இந்திய நேரப்படி இரவில் 8:34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு தாண்டி 2:24 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது. இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் சிவாச்சாரியார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision