26ந் தேதிக்கு பிறகு திருச்சி மக்களே உஷார்....

26ந் தேதிக்கு பிறகு திருச்சி மக்களே உஷார்....

கடந்த மாதம் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது அதன் காரணமாக கோடை வெயிலில் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும் விவசாயிகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் வரும் 28ம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து கோடை மழை குறைந்து வரும் 26ம் தேதி பிறகு வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது உள்ள குளிர்ச்சியான மாறி வெப்ப காற்று வீசும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மீண்டும் 39 டிகிரி முதல் 41 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது குளுமையில் இருக்கும் திருச்சி மக்கள் மீண்டும் வெப்ப தாக்கத்தில் வாட்டி வதைக்கப்படுவார்கள் என வானிலை குறிப்பேட்டில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision