ரூபாய் 500ஐ பறித்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

ரூபாய் 500ஐ பறித்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

கடந்த (23.12.2023)-ந் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனந்தா சில்க்ஸ் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டியும் அவரிடம் இருந்த ரூ.500/- பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

விசாரணையில், மேற்கண்ட சம்பவத்தில் ஈடுப்பட்ட பாலக்கரை கீழபடையாச்சி தெருவை சேர்ந்த மாரி (எ) மாரிமுத்து (36) த.பெ.சேகர் மற்றும் இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி மாரி (எ) மாரிமுத்து என்பவர் மீது கோட்டை காவல் நிலையத்தில் 4 Security Act வழக்குகளும், 3 திருட்டு வழக்குகள் உட்பட 12 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி மாரி (எ) மாரிமுத்து என்பவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision