திருச்சியில் சிறப்பு புத்தக கண்காட்சி தொடக்கம்
நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 38வது தேசிய புத்தக கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று மாத காலம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறைச் சார்ந்த புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் துவக்க விழா தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத்தலைவர் ம. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. புத்தக கண்காட்சியை 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜே.கலைச்செல்வி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். என்.சி.பி.எச் நிறுவனத்தின் மண்டல மேலாளர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.
23வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் நடராஜா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில பொருளாளர் க.இப்ராகிம், இளைஞர் பெருமன்றத்தின் மேற்கு பகுதி செயலாளர் கி.தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக திருச்சி மேலாளர் க.சுரேஷ் நன்றியுரை ஆற்றினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision