விவசாய சங்க பிரதிநிதிகளுடனான வனத்துறை கருத்து கேட்பு கூட்டம்

விவசாய சங்க பிரதிநிதிகளுடனான வனத்துறை கருத்து கேட்பு கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியகத்தில், வனம் சார்ந்த வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வன அலுவலர் கோ.கிரண் தலைமையில் இன்று (06.10.2022) நடைபெற்றது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாய பெருங்குடி மக்கள் மயில், குரங்கு, மான், காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமைகளால் அதிக அளவில் விளை நிலங்களில் பயிர் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதற்கு மாவட்ட வன அலுவலர், வன விலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளை உரிய பரிசீலனை மேற்கொண்டு நிவர்த்தி செய்யப்படும் எனவும் அதற்கான உரிய நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இதற்கான உரிய இழப்பீடு பெறும் மாதிரிப்படிவம் இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டு இனி வரும் காலங்களில் இழப்பீடு தொகை பெறுவதற்கு இம்மாதிரியான படிவத்தில் அறிக்கை செய்ய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உதவி வனப் பாதுகாவலர்கள் எஸ்.சம்பத்குமார், ஆர்.சரவணக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, வனச்சரக அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO