திருச்சியில் பாஜகவினர் சாலை மறியல்- 300-க்கும் மேற்பட்டோர் கைது
திருச்சியில் கல்லூரி அருகில் மனமகிழ் மன்றம் திறக்கப்படுவதை கண்டித்து (01.12.2022) அன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் அணி, மண்டல் தலைவா்கள், திருச்சி மாநகர காவல் துறையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
அதனை கண்டிக்கும் விதமாக இன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திருச்சி மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட 18 மண்டலில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு பகுதியாக உறையூர் மண்டல் சார்பாக நாச்சியார் கோவில் பஸ் ஸ்டாப்பில் சாலை மறியல் ஈடுபட முயன்ற பொழுது கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் எம்பயர் கணேஷ் மற்றும் உறையூர் மண்டல், மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள் அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO