ஆடி வெள்ளி - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரைகள்
அருள்மிகு ஐம்புகேஸ்வார் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவானைக்காவல் அருள்மிகு ஐம்புகேஸ்வார் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் (19.07.2024), (26.07.2024), (02.08.2024), (09.08.2024) மற்றும் (16.08.2024) ஆடிவெள்ளி திருவிழா துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் விபரம்.
1. தமிழ்நாடு மின்சார வாரியம் : (19.07.2024), (25.07.2024), (02.08.2024), (09.08.2024) (16.08.2024) ஆடி வெள்ளி திருவிழா நடைபெறுவதால் திருக்கோயில் மற்றும் அதன் சுற்று பகுதியின் மின் இணைப்பு பழுது ஏற்பட்டால் உடன் நிவர்த்தி செய்ய தேவையான பாதுகாப்பு பணியாளர்களை ஏற்பாடு செய்தல்.
2. காவல்துறை : (19.07.2024), (25.07.2024), (02.08.2024), (09.08.2024) (16.08.2024) ஆடி வெள்ளியினை முன்னிட்டு பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்துதல். ,திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் எண்ணிக்கையில் திரளாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு போக்குவரத்து கண்காணிப்பு விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
திருவானைக்காவல் டிரங்ரோடு சன்னதிவீதி கூட்ட நெரிசலால் இடர்பாடுகள் ஏதும் ஏற்படாமல் தடுத்தல் பொதுமக்களை ஒரே இடத்தில் கூடவிடாமல் தரிசனம் செயத் பக்தர்களை உடனே வெளியேற்றுதல் பிக்பாக்கெட் செயின் பறிப்பு ஏற்படாவண்ணம் கண்காணித்தம். திருக்கோயில் பகுதிகளில் கூட்ட நெரிசலை சமாளிக்க காவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்தல் கயிறு உதவியுடன் தடுப்புகள் ஏற்படுத்தி பக்தர்களை கட்டுப்படுத்துதல். தேவைக்கேற்ப ஒரு வழிப்பாதை அமைத்தல்.
3. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை : திருக்கோயில் அருகில் ஒரு தீயணைப்பு வண்டி மீட்பு மற்றும் முதலுதவி குழுவுடன் (19.07.2024), (26.07.2024), (02.08.2024), (09.08.2024) மற்றும் (16.08.2024) ஆகிய தேதிகளில் காலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஆயத்த நிலையில் இருக்க வைத்திருத்தல்.
4. பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை : (19.07.2024), (26.07.2024), (02.08.2024), (09.08.2024) மற்றும் (16.08.2024) ஆகிய தேகிளில் ஆடிவெள்ளி விழாவினை முன்னிட்டு திருச்சி நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் மெயின்ரோடு, சன்னதிமீதி வடக்கு, தெற்கு பிரகாரம் மற்றும் தேவையான இடங்களில் மருத்துவமனைகள் உதவியுடன் ஆம்புலன்ஸ், மருத்துவ முகாம், முதலுதவி முகாம் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.
5. நெடுஞ்சாலை துறை : (19.07.2024), (26.07.2024), (02.08.2024), (09.08.2024) மற்றும் (16.08.2024) ஆகிய தேகிளில் ஆடிவெள்ளி விழாவினை முன்னிட்டு திருச்சி நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் பகுதியில் ஏராளமான பக்தர்கள் நடந்து வருவதால் சாலையை செப்பனிடுதல் சாலையின் இருபுறங்களிலும் குண்டு குழிகள் இன்றி ஒரே சீராக மண் அமைப்பு ஏற்படுத்தி எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்றவாறு வசதி செய்து கொடுத்தல் சாலையில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற தேவையான பணியாளர்களை நியமித்தல். பக்தர்கள் நடந்து வரும் போது பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து வாகனத்தை பயன்படுத்துதல்.
6. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி :
(19.07.2024), (26.07.2024), (02.08.2024), (09.08.2024) மற்றும் (16.08.2024) ஆகிய தேதிகளில் விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்க ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் சின்டெக்ஸ் பேங்க் குழாயுடன் நிறுவி குடிநீர் வசதி செய்து கொடுத்தல். தற்காலிக கழிவறை மற்றும் குளியறை ஏற்படுத்துதல். குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அனைத்து இடங்களிலும் கத்தம் சுகாதாரம் பாதுகாக்க பணியாளர்ளை கூடுதல் அளவில் நியமனம் செய்து நடவடிக்கை எடுப்பது.
வழிநெடுக பக்தர்கள் மற்றும் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாதபடி டிரங்க்ரோடு, சனினதி வீதி, பாரதிதெரு திருக்கோயில் பிரகாரங்களில் வழிநடை கடைகள் பெரும் எண்ணிக்கையில் விற்பனையாளர்களால் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி சிறிய கடைகள் போடப்படுவதை அகற்றி தருதல். திருவரங்கம் நகராட்சி, காவல்துறை, வட்டாட்சியர், தேசிய நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து திருவானைக்காவல் டிரங்ரோடு மற்றும் சன்னதி வீதி வரை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு நீட்டிப்பினையும் அகற்றி எளிதாக பக்தர்கள் சென்று வர வசதிகள் செய்தல்.
7. போக்குவரத்து துறை: திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து கூடுதல் மற்றும் சன்னதி வீதி வரை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு நீட்டிப்பினையும் அகற்றி எளிதாக பக்தர்கள் சென்று வர வசதிகள் செய்தல்.
8. போக்குவரத்து துறை: திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து கூடுதல் (19.07.2024), (26.07.2024), (02.08.2024), (09.08.2024) மற்றும் (16.08.2024) முடிய ஏற்பாடுகள் செய்தல்..
9. உணவு பாதுகாப்புத் துறை : போக்குவரத்து காவல்துறை, தேசிய நெடுஞ்சாலைதுறை, மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் உணவு பொருட்கள் கொண்டு வருவதை தடுத்தல்.உணவு பாதுகாப்பு துறையிடம் அன்னதானம் வழங்க உரிய சான்று பெற நடவடிக்கை எடுத்தல். திருவானைக்காவல் பகுதியில் முழுவதும் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள், திண்பண்டங்கள் பழங்கள், தரமானதா, ரசாயனகலவை கலக்கப்பட்டுள்ளதா என்பதை குழுவாக சென்று பரிசோதனை செய்தல்.
10. மக்கள் தொடர்பு மற்றும் செய்தி நிறுவனம் : (19.07.2024), (26.07.2024), (02.08.2024), (09.08.2024) மற்றும் (16.08.2024) ஆகிய தேதிகளில் விழாவினை முன்னிட்டு செய்திகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் பத்திரிக்கை ரேடியோ, எப்.எம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக விளம்பரப்படுத்துதல்.
11. தொலைபேசித் துறை : தகவல் பரிமாற்றங்கள் தங்குதடையின்றி சென்றடைய தேவையான ஏற்பாடுகளை செய்தல்.
12. திருக்கோயில் நிர்வாகம் : (19.07.2024), (26.07.2024), (02.08.2024), (09.08.2024) மற்றும் (16.08.2024) ஆகிய தேதிகளில் ஆடி வெள்ளி கிழமை விழா நடைபெறுவதால் திருக்கோயிலில் உள்ள ஜெனரேட்டரை ஆயத்த நிலையில் வைத்திருத்தல். திருக்கோயில் வளாகப்பகுதியில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து பிரசாதம் வழங்கப்பட்டு வெளியேறும் வரையில் தரிசன ஏற்பாடுகள் செய்தல். திருக்கோயில் பணியாளர்கள் சீருடை மற்றம் அடையாள அட்டை அணிந்து பணியாற்றுதல்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision