திருச்சியில் 20 அடி கிணற்றில் விழுந்த காட்டெருமை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுப்பட்டியில் உள்ள செம்மலை பகுதியில் பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மலை அடிவாத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை காட்டெருமை ஒன்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த உரிமையாளர் இது குறித்து மணப்பாறை வனதுறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சென்று பார்த்த போது சுமார் 20 அடி நீர் இருப்பதும் சுமார் 8 வயதான காட்டெருமை தண்ணீரில் விழுந்த ஆக்ரோசத்தில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் மூலம் காட்டெருமையை மீட்கும் பணிகள் நடைபெற்றது. முன்னதாக கால்நடை மருத்துவக்குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் காட்டெருமையை கயிறு கட்டி கிரேன் மூலம் மீட்கப்பட்டனர். மயக்கத்தில் இருந்த காட்டெருமை தள்ளாடிக் கொண்டு வனப்பகுதியில் சென்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision