திருச்சியில் ஸ்வீட் கடை மற்றும் மருந்தகத்தில் திருடிய நபர் கைது - ரூ. 43 ஆயிரம் பறிமுதல்

திருச்சியில் ஸ்வீட் கடை மற்றும் மருந்தகத்தில் திருடிய நபர் கைது - ரூ. 43 ஆயிரம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கும் காட்டூரில் பிரபல ஸ்வீட் கடை ஒன்றும், அதன் அருகே  ஒரு மருந்தகமும் உள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி அந்த இரண்டு கடைகளிலும் இரவு பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன் திருட்டு போனது.

இது குறித்து இரண்டு கடை உரிமையாளர்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து திருடிய நபரை தேடி வந்தனர். மேலும் அந்த கடையில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டும் விசாரணை செய்து குற்றவாளியை தேடி வந்தனர். 

இந்நிலையில் நேற்று திருவெறும்பூர் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தனிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரிக்கும் போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். சி.சி.டி.வி யில் பதிவான நபர் போலவே இருந்ததால் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் என்பதும், அவர்தான் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல ஸ்வீட் கடை மற்றும் மெடிக்கல் கடைகள் பூட்டை உடைத்து பணத்தை திருடியதையும் ஒத்துக் கொண்டுள்ளார்.

பின்னர் ஆறுமுகத்தை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஸ்வீட்ஸ் கடையில் திருட்டு போன பணம் ரூபாய் 39 ஆயிரம், மெடிக்கலில்  திருட்டு போன பணம் ரூ 4 ஆயிரம் உட்பட மொத்தம் 43 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO