குவைத் தீ விபத்தில் திருச்சி ஓட்டுநர் நிலை என்ன? மனைவி மனு
திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜூ எபினேசன். இவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரான ஜான் சாமுவேல் மற்றும் கிருபாமணி அம்மாள் தம்பதியரின் மகன். குவைத் நாட்டில் உள்ள என்.பி.டி.சி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டு காலமாக கண்டெய்ணர் வாகன ஓட்டுநராக ஜான் சாமுவேல் வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், குணசீலன், சம்பத்குமார் என இரண்டு மகன், மீனாட்சி என்ற ஒரு மகள் உள்ளனர். அவர் குவைத் நாட்டில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளதாக ஜான் சாமுவேல் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. வரும் ஜூலை 6 ஆம் தேதி ராஜூ எபினேசன் தனது வேலையை விட்டுவிட்டு தமிழகம் திரும்பி, தனது குடும்பத்தினருடன் வாழ திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தீ விபத்தில் அவர் சிக்கி உள்ளார் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் அவரின் நிலை குறித்து என்னவென்று தெரியாமல் பதறி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து தனது கணவரின் உண்மை நிலை குறித்து கேட்டறிந்து தகவல் கொடுக்க மனு கொடுக்க உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். அவர் உடல்நிலை குறித்த உண்மையான நிலை என்ன என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவரது மனைவி ராஜேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது மகனான குணசீலன் கூறுகையில்...... எனது தந்தை ராஜு கடந்த 6 வருடத்திற்கு மேலாக குவைத்தில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். குவைத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக NBTC நிர்வாகத்தினர் ஃபோன் மூலம் தகவல் அளித்தனர். ஆனால் எனது தந்தை ராஜு இறந்து விட்டதாக இந்திய அரசோ அல்லது இந்திய தூதரகத்தில் இருந்தோ எவ்வித தகவலும் வரவில்லை. எனவே எனது தந்தை உயிருடன் உள்ளாரா? இல்லையா?
எனவே அவர் குறித்த தகவல்களை உடனடியாக வழங்க வேண்டும் என்ற இதுகுறித்து அமைச்சர் தரப்பு கூறுகையில் விபத்தில் சிக்கிய ஏழு பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில் ராஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த சிவகுமார் கோவிந்தன் ஆகிய இருவரும் ஐசி யூனிட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision