ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சனம்- தங்ககுடத்தில் புனிதநீர் ஊர்வலம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சனம்- தங்ககுடத்தில் புனிதநீர் ஊர்வலம்.
108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கும், அதனைத் தொடர்ந்து தாயாருக்கும் நடத்தப்படும்.

கடந்த 11-ம்தேதியன்று ரெங்கநாதருக்கு ஆனித்திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மிகவும் விஷேசமான இன்று ரெங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேகத்திற்காக அம்மாமண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட திருமஞ்சனம்(புனிதநீர்) எடுத்து வரப்பட்டது,  

தங்கக்குடத்தில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோவில் யானை ஆண்டாள்மீது தங்கக்குடத்தை வைத்தும், வெள்ளிக் குடங்களில் நிரப்பபட்ட புனிதநீர் கோவில் அர்ச்சகர்களால் சுமந்துவரப்பட்டு, நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மா மண்டபத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவில் வரை ஊர்வலமாக தாயார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தாயாருக்கு சாற்றப்பட்டிருக்கும் வஸ்திரங்களை களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு மறுபடியும் புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நாளை தாயாருக்கு திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறுகிறது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் புனிதநீர் கொண்டுசெல்லும் நிகழ்சியினை கண்டு வணங்கியபடி நின்றனர்.

இந்நிகழ்விற்கான  ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO