கலவர கும்பலை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கு பயிற்சி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 22.07.202209 காவல் அதிகாரிகள் மற்றும் 80 ஆளினர்களுடன் மத்திய மண்டல காவல்துறை தலைவர், காவல்துறை துணை தலைவர், திருச்சி சரகம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி இன்றைய வாராந்திர கவாதில்
மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் & ஒழுங்கு பிரச்சனையின் போது கலவர கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கலைக்கவும் 5 காவல் அதிகாரிகள் மற்றும் 51 காவல் ஆளினர்களை கொண்டு Mob Operation பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, உடன்பாடு ஏற்படவில்லை என்றால் ஒலிபெருக்கியில் எச்சரிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
அதன் பின்னர் கலவரம் ஏற்படும் சூழல் வந்தால், தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரக்காரர்களை கலைப்பது குறித்தும், கற்கள், ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால், அதிலிருந்து போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வது எப்பது என்பது குறித்தும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரிடையாக கலந்து கொண்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO