ஊரடங்குகளை கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி

ஊரடங்குகளை கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி

முன் கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக முன் கள பணியாளர்களான திருச்சி மாநகர காவல் துறையினருக்கு  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

அதனை மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று திருச்சி மாநகர காவலர்களுக்கு காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆய்தப்படை மைதானம், காவலர்கள் குடியிருப்பு ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

திருச்சி மாநகரில் 97 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காவலர்களால் மட்டும் ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn