81 சதவீதம் பேர் தமிழகத்தில் கல்வியறிவு பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் பேட்டி

81 சதவீதம் பேர் தமிழகத்தில் கல்வியறிவு பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் பேட்டி
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் கள்ளிக்குடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்  100% எழுத்தறிவித்தல் இயக்கத்தினை தொடங்கிவைத்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள கல்வியறிவு இல்லாத  8 ஆயிரம் பேருக்கு  69 நாட்களில் எழுத்தறிவு அளிக்க உள்ளனர். இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் இதை செயல்படுத்த உள்ளோம் என்றார். தமிழகம் முழுவதும் இவர்களைப்போல் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களை இந்த 69 நாட்களில் கல்வியறிவு கற்க தமிழக அரசு  முயற்சி மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 81%. இதை மூன்றாண்டுகளில் 100% ஆக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக பள்ளிகளில் மட்டுமின்றி, பள்ளிக்கு வெளியே முதியோர்கள், தொழிலாளர்களுக்கும் கையெழுத்து போட மட்டுமல்ல எழுத, படிக்கவும் கற்றுத் தரப்படும். ஏற்கனவே இது போன்ற திட்டங்கள் இருந்தாலும் இப்போது புத்துணர்வுடன் செயல்படுத்தப்படுகிறது. 

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒருங்கிணைப்பின் படி மாவட்ட கல்வி அலுவலர்  வட்டகல்வி அலுவலர்  கல்வித் திட்ட அலுவலர்களும் கலந்து  கொண்டனர்.ஒவ்வொரு இடத்திலும் கற்பிக்கும் பணியினை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்  ஆசிரியர்கள்  ஊராட்சிமன்ற தலைவர்கள் தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்த உள்ளனர்.மணிகண்டம் ஒன்றியத்தில் 112021 மக்கள் தொகையின் கணக்கின்படி
 14 89 977 நபர்கள் உள்ளனர். அவர்களின் கையெழுத்து போட எழுத்தறிவு இல்லாதவர்கள் 4599 நபர்கள் பெண்கள் 3576 ஆண்கள் 913 பேர் உள்ளனர்.


முதலில் அவர்கள் கையெழுத்து போடுவதற்கும் பின்னர் படிக்கவும் 69 நாட்களில் இலக்காகக் கொண்டு செயல்பட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
அமைச்சர் உரையாற்றிய பொழுது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி நபர்கள் இவ்வியக்கத்தின் ஆள் பயன்பெற இருக்கிறார்கள் எனவும் இதை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க ஆவன செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I